ஏசு கதையில் வாழ்ந்த 'நாசரேத்' உண்மையில் இருந்ததா? அகழாய்வில் என்ன கிடைத்தது?
இயேசு உண்மையில் வாழ்ந்தவர் தான் எனில் அவர் கதை எழுதிய சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு இயேசுவைத் தெரியுமா- அல்லது செவி வழிக் கதைகளை எழுதினரா- என்பது முக்கியம். சுவிசேஷக் கதைகளுக்கு வெளியே ஏசுவைப் பற்றி எவ்வித வரலாற்றுக் குறிப்புகளும் கிடையாது. மத்தேயு2: 1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள். 9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்