ஏசு கதையில் வாழ்ந்த 'நாசரேத்' உண்மையில் இருந்ததா? அகழாய்வில் என்ன கிடைத்தது?
இயேசு உண்மையில் வாழ்ந்தவர் தான் எனில் அவர் கதை எழுதிய சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு இயேசுவைத் தெரியுமா- அல்லது செவி வழிக் கதைகளை எழுதினரா- என்பது முக்கியம். சுவிசேஷக் கதைகளுக்கு வெளியே ஏசுவைப் பற்றி எவ்வித வரலாற்றுக் குறிப்புகளும் கிடையாது.
மத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள். 9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். 22 ஆனால் யூதேயாவில் ஏரோது அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். |
பெரிய ஏரோது மரணம் பொ.மு. 4ல். அவர் இரண்டு வயதுக் கீழான குழந்தைகளை கொலை எனில் ஏசு பிறப்பு பொ.மு.6ல்
பெரிய ஏரோது மரணத்திற்குப்பின்பு யூதேயாவில் ஏரோது அர்க்கெலா(லேயு) பதவிக்கு வந்தார்.பொ.கா. 6ம் ஆண்டு பஸ்கா பண்டிகை போது ஆட்சிக்கு எதிராக யூத மக்கள் கிளர்ச்சிக்குப் பின் யூதேயா ரோமின் நேரடி கவர்னர் கீழ் வந்தது. மத்தேயுவின்படி பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் பிரசவம்.
லூக்கா2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்கா3:1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். |
லூக்காவின்படி ரோம் கவர்னர் கீழ் யூதேயா வந்தபின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது அதற்காக நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் பெத்லஹெம் வந்த போது மாட்டுத் தொழுவத்தில் பிரசவம்.இது மத்தேயு சொல்லும் காலத்திற்கு 14 வருடம் பின்பு.
லுக்கா ஏசு வாழ்வில் நாசரேத்தில் ஒரு சம்பவம் காட்டுகிறார்.
நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53 - 58; மாற் 6:1 - 6) லூக்கா 4:16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். |
Nazareth http://en.wikipedia.org/wiki/Nazareth
Nazareth is not mentioned in pre-Christian texts and appears in many different Greek forms in the New Testament. There is no consensus regarding the origin of the name.
[And they led Jesus] to the brow of the hill on which their city was built, that they might throw him down headlong.[Lk. 4:29]
வாட்டிகன் போப் அரசரும் லூக்கா கதை மாட்டுத் தொழுவ தீவனத் தொட்டியை கிறிஸ்மஸ் பண்டிகையிலிருந்து நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
நாசரேத் கதை முழுதும் கட்டுக் கதை. நாசரேத்தி அகழ்வு ஆய்வ்களை சரியானபடி விஞ்ஞான ஆய்வு பற்றிய ஒரு வலை இதோ
மத்தேயு சுவியில் கண்டால்
மத்தேயு 2:21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் ஏரோது அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. |
இப்படி ஒரு வசனம் - ஏன் நாசரேத் என்னும் சொல்லே பழைய ஏற்பாட்டில் கிடையாது. தீர்க்கம் நிறைவேறியதாம்.
நாசரேத் என்னும் ஊர் முதல் நூற்றாண்டில் இருந்ததது இல்லை என்பது அறிஞர் கருத்து. அப்படி என்றால் நாசரேத் எப்படி வந்தது?
இவர் மரணம் ரோமன் ஆட்சியின் - ஆய்தக்கிளர்ச்சிக்காரார்களுக்கான தூக்கு மரத்தில் தொங்கும்படி. ஏசு வழக்கை விசாரித்து தண்டனை தந்தது ரோமன்கவர்னர் பிலாத்து, தன் கைப்பட நிருபிக்கப்பட்ட குற்றத்தை குற்ற அட்டையில் "நசரேயன் ஏசு - யூதர்களின் அரசன்" என எழுதித் தொங்க விட்டார். ஏசு மரணம் வெள்ளி அன்று, அது பஸ்கா பண்டிகை தினமோ அல்லது பண்டிகைக்கு முதல் நாளாக இருக்கலாம்.
யோவான்19:19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது. 20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் பாதிரிகள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலாத்துஅவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான் |
ஏசுவும் சீடர்களும் ரோமன் ஆட்சியை வெளியேற்ற நச்ரேய விரதம் மேற்கொண்டிருக்க வேண்டும்.
எண்ணாகமம்6: நசரேய விரத விதிகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நசரேய விரத பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தல்,3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்: திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.4 பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.5 அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது: ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்: அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.6ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.7 தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது: ஏனெனில் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன். தலையில் இருக்கிறது. |
ஏசுவும் சீடர்களும் ரோமன் ஆட்சியை வெளியேற்ற நசரேய விரதம் மேற்கொண்டிருக்க வேண்டும். அனால் நசரெயன் என்பதை நாசரேத் ஊர்க்காரன் என்பதாக கிரேக்க கதாசிரியர்கள் தவறாக புரிந்ததால் வந்ததெ நாசரேத்- மலைமேல் தொழுகை கூடம் கட்டுக்கதைகள்.
Comments
Post a Comment