இயேசு உண்மையில் வாழ்ந்தாரா?
கிறிஸ்துவ சமயத் தொன்ம நாயகர் ஏசு முத்ல நூற்றாண்டில் இஸ்ரேல் ரோம் ஆட்சியின் கீழ் அடிமைப் பட்டு இருந்தபோது வாழ்ந்தார், பல சீடர்கள் சேர்த்து தன்னை யூதர்களின் ராஜா என இயங்க ரோம் கவர்னர் கைது செய்து ரோமன் முறையில் மரண தண்டனையில் இறந்தார் என்பது அடிப்படை, இதனோடு இறந்த மனிதனை தெய்வீகர் என உயர்த்தி மதம் துவங்கியது. ஏசுவை வரலாற்று நபர் எனச் சொல்ல தடைகள் என்ன? மேலும் கதை சொன்ன நால்வரும் மிக நிச்சயமாய் தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி கூறி குழப்பியும் உள்ளனர்- காண்போம். ஒருவரை வரலாற்று முறையில் கூற - இந்த ஊரைச் சேர்ந்த - இவர்களில் மகன், - இந்த வருடம் பிறந்தார்- இந்த வருடம் இறந்தார்- அவர் இந்த இந்த ஊர்களில் இயங்கினார் எனச் சொல்லுவோம். மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர். ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேர...