இயேசு கிறிஸ்துவைத் தேடி - நுழை வாயில்
உலகை இறைவன் படைத்தான் என ஏற்று இறை வழிபாடு செய்யும் இந்து மக்கள் உலகெங்கும் வாழும்போது பல மாற்று மத நம்பிக்கையாளர் சந்திக்கையில் அவர்கள் தாங்கள் நம்பும் தொன்மம் பைபிள்/குரான் மட்டுமே உண்மை என்றும் அவர்கள் கதை தெய்வங்களை நம்பினால் மட்டுமே விடிவு எனும் தாக்குதல் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது. பன்னாட்டு பல்கலைக் கழகங்களில் கடந்த 150 ஆண்டுகளில் நடந்த பைபிள் - விவிலியம் பற்றிய ஆய்வுகள், தொல்லியல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்வது நாம் அந்த கதை வணக்க மதமாற்ற தீவிரவாதிகளை சந்திக்க இயலும்.
இயேசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில் பெரும்பாலன மொழிகளில் மொழிபெயர்த்து ஆண்டிற்கு பல்லாயிரம் கோட்கள் செலவில் பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன். இஸ்ரேலில், பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்திட மரண தண்டனையில் இறந்தார். இவர் பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. அவர் மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த அரை நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடு.
இயேசு -ஜீஸஸ், ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ மதத்தின் கடவுளாக(மகன்) கருதப்படும், இவரின் வாழ்க்கை கதை கிறித்தவர்களின் சமயத் தொன்மமான புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் ஜான் (யோவான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
சுவிஷேசக் கதைகளில் இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும், ரோமன் கவர்னரால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார், ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது. இஸ்லாமியர்களின் தொன்மமான குரானின் கதைகளிலும் இவர் ஈசா என்ற பெயரில் கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே. கடவுளின் அவதாரமில்லை.
மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.
சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.
மதம் பரப்பல் என்பது கிறிஸ்துவத்தில் ஒரு வர்த்தகத் தொழில் என்ற வழியில் பணம் புயல் மாதிரி புகுந்து விளையாடுகிறது. ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டை விட இந்த மதநிறுவனங்களுக்குள் புழங்கும் பணம் மிகஅதிகமாக உள்ளது.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
யூத கிறிஸ்துவ தொன்மக் கதைகளில் சற்றும் வரலாற்று உண்மைகள் கிடையாது என்பது மிகத் தெளிவாய் தொல்லியல் ஆய்வுகள், பைபிளியல் ஏடுகள் நூலின் அமைப்பு ஆய்வுகள், மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது. பைபிள் முழுமையும் பிற்காலத்தில் இஸ்ரேலின் ஆட்சி உரிமை எங்களுக்கு எனக் காட்ட மனிதக் கரங்களால் புனையப்பட்ட தொன்மக் கதைகளே.
வரலாற்று ரீதியில் இயேசு எனும் கிறிஸ்துவ கதை நாயகர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது, இஸ்ரேல் - ரோம் நாடுகளில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து நூல்கள் எழுதிய பல ஆசிரியர் எவரும் ஏசுபற்றி எழுதவில்லை. ஆயினும் பிற்கால சர்ச், இறந்த ஆசிரியர் சிலர் நூல்களில் நுழைத்த இடைச்செருகள் இன்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டன.
இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா - பொமு (பொதுக் காலம் & பொதுக்காலத்திற்கு முன்), என்றே (பழைய தவறான கிபி-கிமு நிறுத்தப் பட்டது, விவிலியக் கதைகளிலேயே ஏசு பிறந்த - இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.
சமயங்களை பின்பற்றுவோர் தன் மதத்தின் மீது அதீதப் பற்று வைத்தல் நடைமுறையே. 100 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் கிறிஸ்துவ சமய சர்ச், விவிலியக் கதைகளை வரலாறு என்பதை வாடிக்கையாய் பரப்புகிறது. மேம்போக்கான ஆய்வு முடிவுகளை 60கள் வரை பரப்பப் பட்ட தவறான ஆதாரங்கள் பெரும் ஆரவாரத்தோடு இன்றும் விளம்பரப் படுத்தப் படுகிறது.
வரலாற்று ஆய்வு என்பது தொன்மக் கதைகள் அல்ல, , புதை பொருள் தொல்லியல் ஆய்வுத் தரவுகள், கல்வெட்டு போன்ற சமகால எழுத்துக்கள், ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம் மதம் பரப்ப அன்றி நடுநிலையாளர் எழுதியவை போன்றவையே. இவற்றின் அடிப்படையில் இன்று ஐரோப்பா -அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்களின் பாட நூல்களின் அடிப்படையிலும், பைபிளியல் மழுப்பலாளர் நூல்கள் அடிப்படையிலும் இந்நுல் உண்மைகளைத் தருகின்றது. கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.
ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாக பயன்படுத்தப்படவும் வேண்டும்.
Comments
Post a Comment